/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வெற்றியின் அத்தியாயம்' கல்லுாரியில் சொற்பொழிவு
/
'வெற்றியின் அத்தியாயம்' கல்லுாரியில் சொற்பொழிவு
ADDED : ஜூலை 25, 2025 08:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லுாரியில், வணிகத்தில் முதுநிலை மற்றும் ஆய்வு துறை சார்பில், வணிக தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் சங்க துவக்க விழா, வெற்றியின் அத்தியாயம் தொடக்கம் என்ற தலைப்பில், சொற்பொழிவு நடந்தது.
கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன் தலைமை வகித்தார். வணிக தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் சங்கத்தின் நோக்கங்கள் குறித்து, வணிகத்துறை தலைவர் இணை பேராசிரியர் மணிகண்டன் பேசினார்.
உதவி பேராசிரியர் சித்திரை செல்வன், முன்னாள் வணிக வரித்துறை தலைவர் கணேசன் ஆகியோர் பேசினர்.
2025-26ம் ஆண்டுக்கான வணிக தலைவர்கள், தொழில்முனைவோர் சங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவியேற்பு, 2024 - 25ம் ஆண்டு கல்வி மற்றும் பிறவகை திறமைகளில் சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வணிக துறை உதவி பேராசிரியர் ஞானசெல்வி நன்றி கூறினார்.