/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் சாரல் மழை சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
/
வால்பாறையில் சாரல் மழை சுற்றுலா பயணியர் மகிழ்ச்சி
ADDED : நவ 14, 2024 04:13 AM
வால்பாறை: வால்பாறையில் நேற்று பெய்த சாரல் மழையினால் சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.
வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையினால் பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள சோலையாறு அணை, காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக காலை நேரத்தில் கடும் பனிமூட்டமும், பகல் நேரத்தில் வெயிலும் நிலவியது. தற்போது குளுகுளு சீசன் நிலவுவதால் சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது.
நேற்று மாலை சாரல் மழை பெய்தது. வால்பாறையை குளிர்விக்கும் வகையில் பெய்த சாரல் மழையினால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்தனர்.