/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
யு.டி.எஸ்., ரூ.1200 கோடி மோசடி வழக்கில் விரைவில் குற்றச்சாட்டு பதிவு
/
யு.டி.எஸ்., ரூ.1200 கோடி மோசடி வழக்கில் விரைவில் குற்றச்சாட்டு பதிவு
யு.டி.எஸ்., ரூ.1200 கோடி மோசடி வழக்கில் விரைவில் குற்றச்சாட்டு பதிவு
யு.டி.எஸ்., ரூ.1200 கோடி மோசடி வழக்கில் விரைவில் குற்றச்சாட்டு பதிவு
ADDED : ஆக 12, 2025 09:19 PM
கோவை, ;யு.டி.எஸ்.,நிதி நிறுவனம் ரூ.1200 கோடி மோசடி வழக்கில், விரைவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
கோவை, பீளமேட்டில் யு.டி.எஸ்., என்ற நிதி நிறுவனம், 2012 முதல் செயல்பட்டு வந்தது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவிலும் கிளைகள் துவங்கினர்.
முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தனர். இதனால் இந்நிறுவனத்தில், 76,000 பேர் சுமார், 1200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர். ஆனால், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் மோசடி செய்தனர்.
கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, அந்நிறுவன நிர்வாக இயக்குனர், சூலுாரை சேர்ந்த ரமேஷ்,35, ரமேசின் தந்தை கோவிந்தசாமி,69, தாயார் லட்சுமி,59, மேலாளர் ஜஸ்டின் பிரபாகரன், 45, கிளை மேலாளர்கள் ஜஸ்கர், சுனில்குமார், கனகராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது, கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் (டான்பிட் கோர்ட்), கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
நிதி நிறுவனம் கணக்கு வைத்திருந்த, 36 வங்கி கணக்குகள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளன.
முடக்கப்பட்ட வங்கி ஆவணங்களை மட்டும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பென்டிரைவில் வழங்க அனுமதிக்க கோரி, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, வரும் 18ம் தேதி விசாரணைக்கு வருகிறது. குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட பிறகு, அடுத்த மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை விரைவில் துவங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.