/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சார்ஜிங் மையங்களும் 23 ஆக உயர்வு அதிகரிக்கும் இ-வாகனங்கள்! கோவை பஸ் டெப்போக்களில் வசதி
/
சார்ஜிங் மையங்களும் 23 ஆக உயர்வு அதிகரிக்கும் இ-வாகனங்கள்! கோவை பஸ் டெப்போக்களில் வசதி
சார்ஜிங் மையங்களும் 23 ஆக உயர்வு அதிகரிக்கும் இ-வாகனங்கள்! கோவை பஸ் டெப்போக்களில் வசதி
சார்ஜிங் மையங்களும் 23 ஆக உயர்வு அதிகரிக்கும் இ-வாகனங்கள்! கோவை பஸ் டெப்போக்களில் வசதி
ADDED : மே 14, 2024 02:36 AM

கோவை:கோவையில் இ-வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அதற்கேற்ப சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையும், உயர்ந்து வருகின்றன.
போக்குவரத்துத்துறை புள்ளி விபரங்களின்படி, கோவையில் இ - வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்து விட்டது.
நாளொன்றுக்கு, 25க்கும் அதிகமாக இ-வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், பதிவு செய்யப்படுகின்றன. அதற்கேற்ப இ-வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
கோவை -திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு சாலை, அவிநாசி மற்றும் சத்தி சாலைகளில், புதியதாக இ-சார்ஜிங் மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. இவை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து, கோவை மண்டல மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மெட்ரோ எல்லைக்குள் இதுவரை, 13 இ-சார்ஜிங் மையங்களும், வடக்கில், 5 தெற்கில், 5 என்று மொத்தம், 23 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் 20 மையங்கள் அமைக்க, பலரும் தடையின்மை சான்று பெற்று வருகின்றனர்.
இந்த இ-சார்ஜிங் மையங்களில் பயன்படுத்தப்படும், மின்சாரத்திற்கென்று 'டேரிப் 7' என்ற மின் கட்டண வகைப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் 'டேரிப் 5' மின் வகைப்பாடும் நடைமுறையில் உள்ளது.
இ-சார்ஜிங் மையங்கள் அமைப்பது தொடர்பாக வரும் விண்ணப்பங்களை, உடனுக்குடன் பரிசீலனை செய்து அனுமதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் கூறுகையில், ''மக்கள் இ-வாகனங்களை நோக்கி, பயணிக்கத்துவங்கிவிட்டனர். தற்போது அதிக எண்ணிக்கையில் இ-வாகனங்களே பதிவு செய்யப்பட்டு வருகின்றன,'' என்றார்.