/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தடுப்பணை விவகாரம்; இழப்பீடு செலுத்த உத்தரவு: விளக்கமளித்த முன்னாள் ஊராட்சி தலைவர்
/
தடுப்பணை விவகாரம்; இழப்பீடு செலுத்த உத்தரவு: விளக்கமளித்த முன்னாள் ஊராட்சி தலைவர்
தடுப்பணை விவகாரம்; இழப்பீடு செலுத்த உத்தரவு: விளக்கமளித்த முன்னாள் ஊராட்சி தலைவர்
தடுப்பணை விவகாரம்; இழப்பீடு செலுத்த உத்தரவு: விளக்கமளித்த முன்னாள் ஊராட்சி தலைவர்
ADDED : ஏப் 09, 2025 12:16 AM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தடுப்பணை விவகாரத்தில், அரசுக்கு இழப்பீடு செய்த தொகையை, முன்னாள் ஊராட்சி தலைவர் செலுத்த வேண்டும், என, சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் அளித்தாக முன்னாள் ஊராட்சி தலைவர் விளக்கம் அளித்துள்ளார்.
பொள்ளாச்சி அருகே, ராமபட்டணம் ஊராட்சி முன்னாள் தலைவர் பொன்னுசாமி மீது தடுப்பணை கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக, அந்த ஊரை சேர்ந்த ராமராஜ் என்பவர், குறைதீர்ப்பு அலுவலருக்கு புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில், குறைதீர்ப்பு அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், இது சம்பந்தமாக சென்னை உயர்நீதி மன்றத்தில் ராமராஜ் வழக்கு தொடர்ந்தார். அதில், ஊராட்சிகள் சட்டத்தின் படி, நடவடிக்கை எடுத்து, அரசுக்கு இழப்பீடு செய்த மொத்த தொகையையும் வசூல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கிடையே ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) வெளியிட்ட அறிவிப்பில், 'ஊராட்சி தலைவர் பதவிக்காலம் முடிந்த நிலையில், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994ம் ஆண்டு சட்டப்பிரிவு, 205ன் கீழ் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது.
எனவே, முன்னாள் ஊராட்சி தலைவர் பொன்னுசாமி மீது குற்றச்சாட்டுகளுக்கு இந்த அறிவிப்பு கிடைக்கப்பட்ட, 15 நாட்களுக்குள், 8,62,959 ரூபாய்க்கான நிதியிழப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களுடன் உரிய விளக்கத்தை மாவட்ட கலெக்டரிடம் நேரிலோ அல்லது தபால் வாயிலாகாவோ சமர்பிக்க வேண்டம் என தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, முன்னாள் ஊராட்சி தலைவரிடம் கேட்ட போது, ''தடுப்பணை கட்டியது சம்பந்தமான முழு ஆதாரங்களுடன் மாவட்ட நிர்வாகத்திடம், 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தடுப்பணை விவகாரம் குறித்து ஆதாரங்களுடன்விளக்கம் அளிக்கப்பட்டது. என் மீது குற்றம் இல்லை; தடுப்பணை மாற்று இடத்தில் கட்டப்பட்டுள்ளதற்கான ஆதாரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.