/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏழு எருமைபள்ளத்தில் தடுப்பணை; விவசாயிகள் உள்ளத்தில் மகிழ்ச்சி
/
ஏழு எருமைபள்ளத்தில் தடுப்பணை; விவசாயிகள் உள்ளத்தில் மகிழ்ச்சி
ஏழு எருமைபள்ளத்தில் தடுப்பணை; விவசாயிகள் உள்ளத்தில் மகிழ்ச்சி
ஏழு எருமைபள்ளத்தில் தடுப்பணை; விவசாயிகள் உள்ளத்தில் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 27, 2025 09:46 PM

மேட்டுப்பாளையம்; பெள்ளாதி ஊராட்சி பகுதியில், ஏழு எருமை பள்ளத்தில், ஒரு கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்டும் பணிகள் நடக்கின்றன.
காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதி ஊராட்சி வழியாக ஏழு எருமைபள்ளம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள விவசாயிகள், கிணற்றுத் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள மொங்கம்பாளையம் மூங்கில்குட்டையில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்த குட்டைக்கு தண்ணீர் கொண்டு வரும்படி, கிராம சபை கூட்டங்களில், விவசாயிகள் மனு அளித்தனர். இதை அடுத்து ஊராட்சியின் சார்பில், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
ஏழு எருமைபள்ளத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், 46 லட்சம் ரூபாய் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், ஒரு கோடி ரூபாய் மதிப்பில், 140 அடி நீளம், 40 அடி அகலம், 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் நடக்கின்றன. இந்த தடுப்பணையில் இருந்து மொங்கம்பாளையம் மூங்கில் குட்டைக்கு, குழாய் வழியாக தண்ணீர் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள, விவசாயக் கிணறுகளுக்கு நீரூற்று கிடைக்கும். தற்போது கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.