/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாதாந்திர உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'செக்கப்'
/
மாதாந்திர உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'செக்கப்'
மாதாந்திர உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'செக்கப்'
மாதாந்திர உதவித்தொகை வழங்க மாற்றுத்திறனாளிகளுக்கு 'செக்கப்'
ADDED : மார் 13, 2024 12:44 AM
கோவை:மாற்றுத்திறனாளிகளுக்கு வயது தளர்வு அளிப்பதற்கான மருத்துவ பரிசோதனை, கோவையில் நேற்று நடந்தது.
தமிழக அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க, 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உடல் நலத்தை பரிசோதித்து பரிந்துரைக்கப்படும்.
இதற்காக, வயது தளர்வு கூட்டம் நடத்தப்படும். நேற்று நடந்த இதற்கான நிகழ்ச்சியை, கலெக்டர் கிராந்திகுமார் துவக்கி வைத்தார். சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை கலெக்டர் சுரேஷ், முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர், மாற்றுத்திறனாளிகளின் உடல் நிலையை பரிசோதித்து, பரிந்துரைத்தனர்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள், அவர்களது ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். 173 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு, உதவித்தொகை வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.