/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குட்டையில் கலக்கும் ரசாயன கழிவு நீர்
/
குட்டையில் கலக்கும் ரசாயன கழிவு நீர்
ADDED : செப் 21, 2025 11:15 PM
அன்னுார்; அச்சம்பாளையம் குட்டையில் பவுண்டரி கழிவு நீர் கலப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரேகவுண்டன்பாளையம் ஊராட்சி, அச்சம்பாளையத்தில், 20க்கும் மேற்பட்ட ஸ்டீல் பவுண்டரிகள் உள்ளன. இந்த பவுண்டரிகளில் பயன்படுத்தப்பட்ட ரசாயனம் கலந்த கருப்பு மண் லோடு கணக்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் அன்னுார் வட்டாரத்தில் நேற்று முன்தினம் மதியம் மழை பெய்தது. நேற்றும் மதியம் மழை பெய்தது. இதில் லோடு கணக்கில் கொட்டி வைக்கப்பட்ட ரசாயனம் கலந்த கருப்பு மண்ணில் விழும் நீர் குட்டையில் கலப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து அச்சம் பாளையம் மக்கள் கூறுகையில், 'நேற்று மதியம் மழை பெய்த சிறிது நேரத்தில் ஊருக்கு கிழக்கே உள்ள மூன்று ஏக்கர் குட்டையில் கருப்பு நிறத்தில் பவுண்டரி ரசாயன மண்ணில் விழுந்த நீர் குட்டையில் கலந்தது. இங்கு சில பவுண்டரிகளில் பாதுகாப்பற்ற முறையில் கருப்பு மண் மலை போல் குவிக்கப்பட்டு வைத்துள்ளது. சுத்திகரிக்கப்படாமல் உள்ளது. இந்த மண்ணில் விழும் மழை நீர் ரசாயனத்துடன் குட்டைக்கு சென்று கலக்கிறது.
அதிகாரிகள் உடனடியாக ரசாயனம் கலந்த கழிவு நீரை வெளியேற்றும் பவுண்டரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமுதாய பொறுப்பு நிதியில் சீரமைக்கப்பட்ட அச்சம் பாளையம் குட்டையில் கழிவுநீர் கலக்காமல் தடை செய்ய வேண்டும்,' என்றனர்.