sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 1 மாணவர்கள் வருத்தம்

/

வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 1 மாணவர்கள் வருத்தம்

வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 1 மாணவர்கள் வருத்தம்

வேதியியல் தேர்வு கடினம் பிளஸ் 1 மாணவர்கள் வருத்தம்


ADDED : மார் 27, 2025 11:20 PM

Google News

ADDED : மார் 27, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: 'வேதியியல் தேர்வு கடினமாக இருந்தது,' என பிளஸ் 1 மாணவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

பிளஸ் 1 பொது தேர்வு இறுதி நாளான நேற்று, வேதியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வு நடந்தது.

வேதியியல் தேர்வு கடினம்


சிந்தனா, மோளகாளிபாளையம்:

வேதியியல் பாடத்தில், 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியாது.

தேர்ச்சி பெறுவது எளிது


பிரியதர்ஷினி காளியாபுரம்:

ஒரு மதிப்பெண் மற்றும் 2 மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. மற்ற கேள்விகள் கடினமாக இருந்தன. பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்ச்சி பெறுவது எளிது. ஆனால் சென்டம் பெற முடியாது.

அதிக மதிப்பெண் பெறலாம்


அன்பு, அல்லிகுளம்:

கணக்குப்பதிவியலில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதில் ஒன்று, இரண்டு, ஐந்து மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெறலாம். மூன்று மதிப்பெண் கேள்விகள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. பல கேள்விகள் ஆசிரியர் தெரிவித்ததில் வந்திருந்தது. பிளஸ் 1 பொதுத் தேர்வு நேற்று முடிவடைந்ததை அடுத்து மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் தங்களுக்குள் பேசி கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us