/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஜி.வி., மெட்ரிக் பள்ளியில் செஸ் போட்டி
/
பி.ஜி.வி., மெட்ரிக் பள்ளியில் செஸ் போட்டி
ADDED : ஜூலை 24, 2025 09:24 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த போட்டியை பள்ளியின் முதல்வர் வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். இதில், 11, 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் என, நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.
இதில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள மாநகராட்சி, தொடக்க, நடுநிலை மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும், 480க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.