/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஏஐ தொழில்நுட்பத்துடன் செஸ் பயிற்சி தொடக்கம்
/
ஏஐ தொழில்நுட்பத்துடன் செஸ் பயிற்சி தொடக்கம்
ADDED : ஜூலை 16, 2025 10:55 PM
கோவை; கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செஸ் பயிற்சி வகுப்புகள், இலவசமாக தொடங்கப்பட்டுள்ளன.
மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் 148 பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில், இப்பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. சதுரங்க விளையாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள 150 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் இணைந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்கான துவக்க நிகழ்வு, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களுக்கு இலவச செஸ் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
அதே பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 'ஹைடெக்' ஆய்வகத்தை, கோவை எம்.பி.,ராஜ்குமார் திறந்து வைத்தார். தொடர்ந்து, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, ஸ்டெம் லேபையும் அவர் திறந்து வைத்தார். மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

