/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செட்டிநாடு ஷாப்பிங், உணவு திருவிழா: கோவையில் நாளை துவக்கம்
/
செட்டிநாடு ஷாப்பிங், உணவு திருவிழா: கோவையில் நாளை துவக்கம்
செட்டிநாடு ஷாப்பிங், உணவு திருவிழா: கோவையில் நாளை துவக்கம்
செட்டிநாடு ஷாப்பிங், உணவு திருவிழா: கோவையில் நாளை துவக்கம்
ADDED : நவ 13, 2025 09:28 PM

கோவை: கோவை நகரத்தார் சங்கம் சார்பில், கோவையில் 'வைப்ஸ் ஆப் செட்டிநாடு' என்ற பெயரில், நாளையும், நாளை மறுநாளும், செட்டிநாடு ஷாப்பிங் மற்றும் உணவு திருவிழா நடக்கிறது.
'வைப்ஸ் ஆப் செட்டிநாடு' நிகழ்ச்சியின் தலைவர் பழனியப்பன், துணை தலைவர் மணிகண்டன், கோவை நகரத்தார் சங்கத்தின் தலைவர் சுந்தரேசன் ஆகியோர் கூறியதாவது:
கோவையில் ஆண்டுதோறும் கோவை விழா, கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்து வருகிறது. இதை கோவையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, ஒரு மாபெரும் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கோவை நகரத்தார் சங்கத்தின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று, எங்களது செட்டிநாடு பாரம்பரியத்தை, கோவை மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இரு நாட்கள் விழாவை நடத்துகிறோம்.
கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில், வரும் 15, 16ம் தேதிகளில் காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடக்கிறது. இதில் 100க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களின் ஸ்டால்கள் மற்றும் 8 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கள் தொழில் திறன்களை வெளிப்படுத்தும் ஸ்டால்கள் இடம்பெறவுள்ளன.
செட்டிநாடு வீடு போன்ற பிரம்மாண்டமான முகப்பு அமைத்து, அதில் பல வகையான பொருட்கள் மற்றும் செட்டிநாடு உணவு வகைகளின் விற்பனை கூடங்கள் இடம் பெற உள்ளன.
பள்ளி மாணவ, மாணவியருக்கு திறன் போட்டிகள், கலை, கையெழுத்து, பேச்சுப்போட்டி, பாட்டு மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன. அனுமதி இலவசம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

