/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வருக்கு கருப்பு தபால் அனுப்பிய சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள்

ADDED : நவ 13, 2025 09:28 PM

கோவை: சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கான ஓய்வூதியமாக மாதந்தோறும், 6,750 ரூபாயை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழக முதல்வருக்கு கருப்பு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் கீழ், 42 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வாழ்வதற்கான ஓய்வூதியமாக 6,750 ரூபாயை மாதந்தோறும் வழங்கவேண்டும்.
மருத்துவ காப்பீடு மற்றும் ஈமச்சடங்கு தொகை ரூ. 25,000 வழங்கிடவும். தி.மு.க., தேர்தல் வாக்குறுதியான குறைந்தபட்ச பென்சன் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் அலுவலகத்திலிருந்து தபால் கார்டுகளில் கருப்பு வண்ண கோடிட்டு தமிழக முதல்வருக்கு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.