/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சிபாகா' ஆண்டுவிழா கொண்டாட்டம்
/
'சிபாகா' ஆண்டுவிழா கொண்டாட்டம்
ADDED : அக் 14, 2025 01:45 AM
கோவை:கோவைகட்டுனர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் (சிபாகா )14வது ஆண்டு தின விழா, ஹோட்டல் ரெசிடென்சி டவர்சில் நடந்தது. கங்கா மருத்துவமனை தலைவர் டாக்டர் ராஜசேகரன், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
டாக்டர் நெட் இந்தியாவின் நிறுவனர்களான அரவிந்தன், அபிராமி ஆகியோர்,நலிந்த சமூகத்திற்கு சுகாதாரப் பராமரிப்பில் செய்துவரும் அளப்பரிய சிறப்பான சேவைக்காக, சிபாகா அவார்டு ஆப் எக்ஸ்லன்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில், 'தக் லைப்' திரைப்படத்தில்,'அஞ்சு வண்ண பூவே' பாடல் பாடிய பாடகர் சாருலதா, இசை நிகழ்ச்சியை நடத்தினார்.சிபாகா சங்கத்தின் ஆண்டு விழா தலைவர் சுவாமிநாதன், தலைவர் ரம்யா, செயலாளர் சம்சுதீன், பொருளாளர் உதயானந்த் மற்றும் இணைச் செயலாளர் கிருஷ்ணகுமார் பங்கேற்றனர்.முக்கிய பிரமுகர்களுடன், சிபாகா உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 300க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.