ADDED : ஆக 19, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
கோவை: அவிநாசி ரோடு நீலாம்பூர் அருகே, கால்வாயில் கொட்டப்பட்டுள்ள மாட்டின் மண்டை ஓடுகள் மற்றும் கோழிகளின் கழிவுகளால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மாநகராட்சி எல்லை துவங்கும் இப்பகுதியில், நள்ளிரவில் வரும் சில வாகனங்கள் மூட்டையில் கட்டப்பட்ட இறைச்சி கழிவுகளை கொட்டிச் சென்று விடுகின்றனர்.
அருகில் பிரம்மாண்டமான ஓட்டல்களும், சாலையோர வியாபாரிகளும் உள்ள பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
