ADDED : ஆக 19, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில், அரசு கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
வால்பாறை பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில், அரசு கலை அறிவியல் கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, முதல்வர் கோபி தலைமையில் நடந்தது. பிரம்ம குமாரிகள் அமைப்பின் வால்பாறை ஒருங்கிணைப்பாளர் கற்பகம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், போதை பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமைப்பின் சார்பில் விரிவாக பேசினர். அதனை தொடர்ந்து, கல்லுாரி போதை பொருள் ஒழிப்பு மன்றம் மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பின் சார்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
