/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரத்தில் கோழி இறைச்சி கழிவு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
/
ரோட்டோரத்தில் கோழி இறைச்சி கழிவு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
ரோட்டோரத்தில் கோழி இறைச்சி கழிவு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
ரோட்டோரத்தில் கோழி இறைச்சி கழிவு; பொதுசுகாதாரம் பாதிப்பு!
ADDED : மே 04, 2025 10:02 PM

கழிவுநீர் தேக்கம்
ஆனைமலை, கோட்டூர் மலையாண்டிபட்டினம், 15வது வார்டில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு இருப்பதால், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
-- முருகானந்தம், ஆனைமலை.
ரோட்டில் கோழிக்கழிவு
பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு, பொன்னாயூர் பகுதியில் கனரக வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடத்தில், அதிகளவு கோழிக்கழிவுகள் கொட்டப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு கொட்டப்பட்டுள்ள கழிவை உடனடியாக அகற்ற வேண்டும். மறுபடியும் கழிவு கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், பொள்ளாச்சி.
ரோட்டில் குழி
கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகம் செல்லும் சர்வீஸ் ரோட்டில் குழி ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி செல்கின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-- கார்த்தி, கிணத்துக்கடவு.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டோரம் உள்ள நடைபாதையில் சிலர் கடை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால், மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சர்வீஸ் ரோட்டில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்பு பகுதியை மீட்க வேண்டும்.
- கோகுல், கிணத்துக்கடவு.
பஸ் ஸ்டாண்டில் குப்பை
கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில் உள்ள குப்பை தொட்டியில், குப்பையை கொட்டாமல் திறந்தவெளியில் சிலர் வீசி செல்கின்றனர். இதனால், பஸ் ஸ்டாண்ட் முழுக்க குப்பை சிதறி கிடக்கிறது. எனவே, இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி திறந்தவெளியில் குப்பை கொட்டுபவர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கண்ணன், கிணத்துக்கடவு.
புகையால் அவதி
உடுமலை, காந்திநகர் பகுதியில் குடியிருப்புகளில் தேங்கும் கழிவுகளை திறந்தவெளியில் தீயிட்டு எரிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் அதிகமான புகை பரவுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் காற்று வீசும் நேரங்களில் கழிவுகளிலிருந்து தீப்பொறியும் பறக்கிறது.
- தினேஷ், உடுமலை.
பள்ளத்தால் விபத்து
உடுமலை, திருப்பூர் ரோடு ஏரிப்பாளையம் சந்திப்பில் ரோட்டில் 'மெகா' பள்ளம் உள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் விபத்துக்குள்ளாகின்றனர். பள்ளம் ரோட்டின் ஓரமாக இருப்பதால் வாகனங்களை திருப்பும் போதும், ஒதுங்கி செல்லும்போதும் ஓட்டுநர்கள் தடுமாற வேண்டியுள்ளது.
- லாவண்யா, உடுமலை.
வேகத்தடையால் சிக்கல்
உடுமலை, கணக்கம்பாளையம் எஸ்.வி.புரம் பகுதியில் குடியிருப்புகளின் அருகே வேகத்தடை தேவையில்லாத இடங்களிலும் போடப்பட்டுள்ளன. போதிய குறியீடுகள் அமைக்காததால், இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.
-சேகர், கணக்கம்பாளையம்.
சுகாதாரம் பாதிப்பு
உடுமலை, வ.உ.சி., வீதி, பசுபதி வீதி சந்திப்பில் குப்பைக்கழிவுகள் தொடர்ந்து ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதி முழுவதுமே சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.
-பாலகுமார், உடுமலை.
வாகனங்களால் அச்சம்
உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ரயில்வே ஸ்டேஷன் ரோடு சந்திப்பு பகுதியில், அமைக்கப்பட்டுள்ள ரவுண்டானாவில், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. வாகனங்களில் 'சிக்னல்' கொடுக்காமல் திரும்புவதால் விபத்து ஏற்படுகிறது. இதனால், மக்கள் அச்சத்துடன் ரோட்டில் பயணிக்கும் நிலை உள்ளது.
- உமாமகேஸ்வரி, ராமசாமி நகர்.
குளத்தை துார்வாரணும்!
உடுமலை, கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, வெனத்துபட்டி கிராமத்தில், குளம் துார்வாரப்படாமல், சீமைக்கருவேல மரங்கள் அதிகம் வளர்ந்துள்ளன. இதனால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதித்துள்ளது. குளத்தை துார்வாரி மேம்படுத்தி, மழைநீரை சேமிக்க திட்டமிட வேண்டும்.
- ராம்குமார், கணபதிபாளையம்.