/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மண்டல குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் விடுவிப்பு
/
மண்டல குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் விடுவிப்பு
மண்டல குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் விடுவிப்பு
மண்டல குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் விடுவிப்பு
ADDED : மார் 27, 2025 02:13 AM
கோவை:தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோவை மண்டலத்துக்கான, தலைமை பொறியாளராக இருந்த செல்லமுத்து, அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கோவைக்கு மிக முக்கியமான குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை, கேரள வனப்பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ளது. அம்மாநில நீர்ப்பாசனத்துறை பராமரிக்கிறது. அதற்கான தொகை, மாநகராட்சியில் இருந்து குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக வழங்கப்படுகிறது.
இதன்படி வழங்க வேண்டிய தொகையை, கொடுக்காமல் கிடப்பில் போட்டதால், சிறுவாணியில் இருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவை, கேரள அரசு குறைத்தது.
இதுதொடர்பாக, சட்டசபை கூட்டத்தொடரில், முன்னாள் அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பிய பிறகே, நகராட்சி துறை அமைச்சரான நேருவுக்கு, இவ்விஷயம் தெரியவந்தது.
இச்சூழலில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் செல்லமுத்து, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு வேறு பணியிடம் ஒதுக்கப்படவில்லை. இப்பதவிக்கு, திருச்சியில் இருந்து தலைமை பொறியாளர் எழிலரசனுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.