/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்குப்புறவழிச்சாலை பணி தலைமை பொறியாளர் ஆய்வு
/
மேற்குப்புறவழிச்சாலை பணி தலைமை பொறியாளர் ஆய்வு
ADDED : ஏப் 26, 2025 11:27 PM

கோவை: கோவையில் நடந்து வரும் மேற்குப்புறவழிச்சாலை பணிகளை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்தியப்பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார்.
கோவையில் மதுக்கரை அருகே மைல்கல் பகுதியில் துவங்கி, நரசிம்மநாயக்கன் பாளையம் வரை, 32.43 கி.மீ., துாரத்துக்கு மேற்குப்புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது.
முதல் கட்டமாக, மைல்கல் முதல் மாதம்பட்டி வரை, 11.8 கி.மீ., துாரத்துக்கு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை, நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) தலைமை பொறியாளர் சத்தியப்பிரகாஷ் நேற்று ஆய்வு செய்தார். கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி ஆகியோர், மேற்குப்புறவழிச்சாலை பணிகளை விளக்கினர்.
மைல்கல் பகுதியில் பாலம் கட்டும் பணியை துவக்க அறிவுறுத்திய தலைமை பொறியாளர், குவாரி அருகே பாலம் கட்ட வேண்டிய இடத்தை பார்வையிட்டார்.
இதுவரை, ஏழு கி.மீ., துாரத்துக்கு தார் சாலை போடப்பட்டிருக்கிறது; 65 சதவீத பணிகள் நிறைவடைந்து இருப்பதாகவும், மாதம்பட்டியில் பாலம் அமைக்கும் பணி 70 சதவீதம் முடிந்திருக்கிறதென, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். சாலை அமைத்துள்ள பகுதிகளில் அதன் தரம் மற்றும் தடிமனை தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.