/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதமலை கோவிலில் தலைமை நீதிபதி தரிசனம்
/
மருதமலை கோவிலில் தலைமை நீதிபதி தரிசனம்
ADDED : ஜூலை 06, 2025 11:59 PM

தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம், அவரது மனைவியுடன், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, நேற்று சுவாமி தரிசனம் செய்ய வந்தார். அவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, தலைமை நீதிபதி, விநாயகர், மூலவர், ஆதிமூலவர், வரதராஜ பெருமாள், பாம்பாட்டி சித்தர் சன்னதியில், சுவாமி தரிசனம் செய்தார். கோவிலின் வரலாறு குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அவருடன், கோவை மாவட்ட நீதிபதிகள், விஜயா, ஹரிஹரன் ஆகியோரும் சுவாமி தரிசனம் செய்தனர். மருதமலை கோவில் துணை கமிஷனர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர் கனகராஜ் உடன்இருந்தனர்.