/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைக்கு மத்திய அரசு விருது; கலெக்டருக்கு முதல்வர் பாராட்டு
/
கோவைக்கு மத்திய அரசு விருது; கலெக்டருக்கு முதல்வர் பாராட்டு
கோவைக்கு மத்திய அரசு விருது; கலெக்டருக்கு முதல்வர் பாராட்டு
கோவைக்கு மத்திய அரசு விருது; கலெக்டருக்கு முதல்வர் பாராட்டு
UPDATED : டிச 09, 2025 08:17 AM
ADDED : டிச 09, 2025 05:07 AM

கோவை: கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சி எடுத்ததால், நீர் மட்டம் வெகுவாக குறைந்து வறட்சி ஏற்படும் நிலை இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் மற்றும் செயல்படாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளை செயல்பட வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிகள் அனைத்தும், ஜல் சஞ்சய் ஜன் பகிதரிஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய அளவில் கோவை மாவட்டம் இரண்டாவது பிரிவில், முதலிடத்துக்கான விருது பெற்றது.
சமீபத்தில் மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் 6வது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா, புதுடில்லி விக்யான் பவனில் நடந்தது. கோவை கலெக்டர் பவன்குமார் சார்பில் பங்கேற்ற கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் சாகேவிடம், தேசிய நீர் விருதை, மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சர் பாட்டில் வழங்கினார். 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.