/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அவிநாசி ரோடு 10 கி.மீ. மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
/
அவிநாசி ரோடு 10 கி.மீ. மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
அவிநாசி ரோடு 10 கி.மீ. மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
அவிநாசி ரோடு 10 கி.மீ. மேம்பாலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ADDED : அக் 10, 2025 07:14 AM

கோவை: ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்ட கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
உப்பிலிபாளையம் முதல் நீலாம்பூர் வரையிலான, 16 கி.மீ. துாரம் நிலவிய போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கிய வேலைகள், தி.மு.க. ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,791.23 கோடியில் அமைந்துள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, பாலத்தில் பயணித்தார். பாலத்துக்கான கல்வெட்டை, முதல்வரும், ஜி.டி.நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலும் இணைந்து திறந்து வைத்தனர்.
அமைச்சர்கள் வேலு, முத்துசாமி, சாமிநாதன், அன்பரசன், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ், கலெக்டர் பவன்குமார், பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்ரமணியன், கே.ஜி. மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கிருஷ்ணா கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் சென்ற பின், 25 நிமிடங்களுக்கு பிறகு மேம்பாலத்தில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. மழை, வெயில் பாராமல் மேம்பால கட்டுமான பணியில் ஈடுபட்ட பொறியாளர்கள் பாலத்தில் நின்று படம் எடுத்து மகிழ்ந்தனர்.