/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் ஸ்டாலின் நவ., 5ல் கோவை வருகை
/
முதல்வர் ஸ்டாலின் நவ., 5ல் கோவை வருகை
ADDED : அக் 26, 2024 06:45 AM

கோவை: கோவைக்கு தமிழக முதல்வர் நவ., 4ல் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது. திட்டம் மாற்றப்பட்டு, மறுநாள் நவ., 5ல் வருகை தர உள்ளார்.
கோவை, பீளமேடு அரசு மருத்துவக் கல்லுாரி அருகே, 9.5 ஏக்கரில் 2.66 லட்சம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ள டைடல் பார்க்கை திறக்கவும், கலைஞர் நுாற்றாண்டு விழா நுாலகத்திற்கான அடிக்கல் நாட்டவும், கோவைக்கு நவ., 4ம் தேதி தமிழக முதல்வர் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது.
இத்திட்டம் மாற்றப்பட்டு, நவ., 5ல் வரும் அவர், காலை 11:00 மணிக்கு டைடல் பார்க்கை திறந்து வைக்கிறார். பின், கலெக்டர் அலுவலகத்தில், தங்கநகை தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன் பேசுகிறார். தொடர்ந்து, தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார்.
மாலையில், கோவை சர்க்யூட் ஹவுசில் தொழில் துறை சார்ந்த வி.ஐ.பி.,க்களை சந்திக்கிறார். நவ., 6 காலை 11:00 மணிக்கு, டாக்டர் நஞ்சப்பா சாலையிலுள்ள செம்மொழிப்பூங்கா கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்கிறார். பின், கலைஞர் நுாற்றாண்டு விழா நுாலகத்திற்கான கட்டுமானப்பணிகளுக்கு, அடிக்கல் நாட்டுகிறார். சிறிது நேர ஓய்வுக்குப்பின், கோவை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு திரும்புகிறார்.