/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வரே... வாக்குறுதி என்னாச்சு; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
/
முதல்வரே... வாக்குறுதி என்னாச்சு; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
முதல்வரே... வாக்குறுதி என்னாச்சு; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
முதல்வரே... வாக்குறுதி என்னாச்சு; பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 08:10 PM
கோவை; தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, சுதந்திர தின பரிசாக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து உத்தரவிட வேண்டும் என, தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
தி.மு.க. ஆட்சிக்கு வந்த நுாறு நாட்களில், பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, கடந்த சட்டசபை தேர்தலில், இன்றைய முதல்வர் வாக்குறுதி அளித்தார். தி.மு.க.ஆட்சி முடிய இன்னும் 271 நாட்களே உள்ளன. அதற்கு முன், கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
மாணவர்கள் நலன் மற்றும் 12 ஆயிரம் ஆசிரியர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு சுதந்திர தின பரிசாக, பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவை வழங்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.-