ADDED : மார் 03, 2026 05:55 AM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தி.மு.க., சார்பில் நடந்த முதல்வர் பிறந்த நாள் விழாவில், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி, தெற்கு நகர தி.மு.க. சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின், 73வது பிறந்த நாளை முன்னிட்டு, பொள்ளாச்சி நகர் பகுதியில் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பலருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, பொள்ளாச்சி நகர மன்ற துணைத்தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். மேலும், இதில் தி.மு.க., கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என, பலர் பங்கேற்றனர்.
