/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேரு கல்லுாரியில் முதல்வர்கள் மாநாடு
/
நேரு கல்லுாரியில் முதல்வர்கள் மாநாடு
ADDED : ஜன 13, 2025 06:12 AM

கோவை; நேரு கல்வி குழும கல்லுாரிகளின் கூட்டமைப்பு மற்றும் கேனி கன்சார்டியம் ஆப் காலேஜஸ் சார்பில், 'இந்திய அறிவு அமைப்பு, நிலையான கல்வி எதிர்கால இலக்குகள் மற்றும் தேசியக் கல்வியை ஒருங்கிணைக்கும் முழுமையான கல்வியை வளர்ப்பது' என்ற பெயரில், முதல்வர்களின் மாநாடு நடத்தப்பட்டது.
நேரு கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமை தாங்கி பேசுகையில், ''மாணவர்களை கல்வியில் சிறந்து விளங்கச் செய்வது மட்டுமல்லாமல், அவர்களை செழிப்பான உலகிற்கு பங்களிப்பதை உறுதி செய்யும், கல்வி நடைமுறைகளை கூட்டாக ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.
நேரு கல்வி குழுமங்களின் செயலாளர் கிருஷ்ண குமார், செயல் இயக்குனர் நாகராஜா, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அனிருதன் மற்றும் பல்வேறு கல்லுாரிகளின் முதல்வர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர்.