/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; திறமையை காட்டிய அணிகள்
/
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; திறமையை காட்டிய அணிகள்
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; திறமையை காட்டிய அணிகள்
முதல்வர் கோப்பை கிரிக்கெட்; திறமையை காட்டிய அணிகள்
ADDED : செப் 02, 2025 08:54 PM

கோவை; கோவை டி.கே.எஸ்.பள்ளி மற்றும் சங்கரா கல்லுாரியில், முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள், இரு நாட்களாக நடந்து வருகின்றன. பள்ளி மாணவர்களுக்கான பிரிவில், 70 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று டி.கே.எஸ்.பள்ளியில், 14 போட்டிகள் நடந்தன.
பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி மற்றும் ஆர்.என்.பி. பாய்ஸ் அணிக்கும் இடையே நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த பி.எஸ்.ஜி. சர்வஜனா பள்ளி, மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி, 36 ரன் எடுத்தது. ஆர்.என்.பி. பாய்ஸ் அணி மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு, 20 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.
மற்றொரு போட்டியில், ஆர்.கே.எஸ். பள்ளி அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு, 49 ரன் எடுத்தது. கார்மல் கார்டன் பள்ளி அணி, ஒரு விக்கெட்டை இழந்து, 24 ரன் எடுத்து தோல்வியடைந்தது.
மற்றொரு போட்டியில், முதலில் பேட் செய்த ராமகிருஷ்ணா பள்ளி அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து, 38 ரன் எடுத்தது. நேஷனல் மாடல் பள்ளி அணி மூன்று விக்கெட்களை இழந்து, 19 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து போட்டிகள் நடந்தன.