/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை கால்பந்து; ஜூட், டிராக் போர்ஸ் அசத்தல்
/
முதல்வர் கோப்பை கால்பந்து; ஜூட், டிராக் போர்ஸ் அசத்தல்
முதல்வர் கோப்பை கால்பந்து; ஜூட், டிராக் போர்ஸ் அசத்தல்
முதல்வர் கோப்பை கால்பந்து; ஜூட், டிராக் போர்ஸ் அசத்தல்
ADDED : செப் 02, 2025 08:55 PM

கோவை; முதல்வர் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள், குமரகுரு கல்லுாரி வளாகத்தில் நடந்து வருகின்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த, 23 அணிகள் பங்கேற்றுள்ளன. பல்வேறு சுற்று போட்டிகளின் முடிவில் நேற்று காலிறுதிப் போட்டிகள் நடந்தன.
முதல் காலிறுதிப் போட்டியில், பொள்ளாச்சி கால்பந்து கிளப் அணி, கோவை யுனைடெட் அணிகள் மோதின. பொள்ளாச்சி கால்பந்து கிளப் அணி, 3 கோல் அடித்தது. கோவை யுனைடெட் கிளப் அணி கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது காலிறுதியில், ஜூட் கால்பந்து கிளப் மற்றும் ஏ.எப்.சி. பிரதர்ஸ் அணிகள் மோதின. ஜூட் கால்பந்து கிளப் அணி, 1 கோல் அடித்து வெற்றி பெற்றது.
மூன்றாவது காலிறுதியில், பிச்சனுார் கால்பந்து கிளப் மற்றும் டிராக் போர்ஸ் அணிகள் மோதின. டிராக் போர்ஸ் அணி, இரு கோல் அடித்தது. பிச்சனுார் கால்பந்து கிளப் அணி கோல் அடிக்கவில்லை. தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகள் நடந்தன. இன்று இறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன.