/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாராயண குரு சமாஜத்தின் இளைஞரணியினர் தேர்வு
/
நாராயண குரு சமாஜத்தின் இளைஞரணியினர் தேர்வு
ADDED : செப் 02, 2025 08:56 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி நாராயண குரு சமாஜத்தின் இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு, முத்துக்குமார்சாமி லே-அவுட்டில் உள்ள சமாஜம் அலுவலகத்தில் நடந்தது. தமிழக பேரமைப்பு தலைவர் செந்தாமரை தலைமை வகித்தார். பொள்ளாச்சி நாராயண குரு சமாஜம் தலைவர் கொச்சப்பன் முன்னிலை வகித்தார்.
இளைஞரணி தலைவராக சிவபிரகாஷ், செயலாளராக வினீஷ், பொருளாளராக பாபு, இணைச் செயலாளர்களாக கிருஷ்ணகுமார், ரவீந்திரன், துணைத் தலைவராக ஆறுச்சாமி, ஒருங்கிணைப்பாளராக ராஜேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாராயண குரு சமாஜம் பொருளாளர் கண்ணன், சேர்மன் சிஜில், இன்டர்னல் ஆடிட்டர் சிவபாக்கியம், மகளிரணி தலைவர் சரிதா, துணைத்தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.