/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வர் கோப்பை' கிரிக்கெட் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா அணிகள் வெற்றி
/
'முதல்வர் கோப்பை' கிரிக்கெட் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா அணிகள் வெற்றி
'முதல்வர் கோப்பை' கிரிக்கெட் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா அணிகள் வெற்றி
'முதல்வர் கோப்பை' கிரிக்கெட் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா அணிகள் வெற்றி
ADDED : செப் 07, 2025 09:39 PM
கோவை; பள்ளி மாணவர்களுக்கான 'முதல்வர் கோப்பை' கிரிக்கெட் போட்டி, சங்கரா கல்லுாரியில் நடந்தது. 20க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடின.
போட்டிகளின் நிறைவில் ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் கல்வி நிலையம் முதலிடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா சி.பி.எஸ்.இ.பள்ளி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
மாணவியருக்கான போட்டி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்.பள்ளி மைதானத்தில் நடந்தது. நிறைவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதலிடத்தையும், ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி இரண்டாம் இடத்தையும், சைதன்யா ஜோதி நிகேதன் பள்ளி மூன்றாம் இடத்தையும் வென்றன.
கல்லுாரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள், தமிழ்நாடு வேளாண் பல்கலை, வனக்கல்லுாரி, ஜி.சி.டி.கல்லுாரி மைதானங்களில் நடந்தது. மாணவர்களுக்கான போட்டியின் நிறைவில், கே.பி.ஆர். கலை அறிவியல் கல்லுாரி முதலிடத்தையும், மாருதி கல்லுாரி இரண்டாம் இடத்தையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
மாணவியருக்கான பிரிவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதலிடத்தையும், பாரதியார் பல்கலை இரண்டாம் இடத்தையும், அவினாசிலிங்கம் மகளிர் பல்கலை மூன்றாம் இடத்தையும் பிடித்தன.
இந்த அணிகளில் இருந்து, மாநில அளவிலான போட்டிக்கு சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.