/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை கைப்பந்து: கற்பகம் பல்கலை கலக்கல்
/
முதல்வர் கோப்பை கைப்பந்து: கற்பகம் பல்கலை கலக்கல்
ADDED : செப் 01, 2025 07:31 PM

கோவை:
கற்பகம் பல்கலையில் முதல்வர் கோப்பை கைப்பந்து போட்டி இரு நாட்கள் நடந்தது. கல்லுாரி மாணவர்களுக்கான பிரிவில், 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில், கற்பகம் பல்கலை அணி, ஸ்ரீ ராமு கல்லுாரி அணியை, 17-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி கொண்டது.
காலிறுதி போட்டியில், கற்பகம் பல்கலை அணி, கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணியை எதிர்கொண்டது. இதில், 2-23 என்ற புள்ளிக்கணக்கில் கற்பகம் பல்கலை வெற்றி பெற்றது. அரையிறுதியில், கற்பகம் பல்கலை அணி, 38-22 என்ற புள்ளிக்கணக்கில் நேரு கல்லுாரி அணியை வென்றது.
இறுதி போட்டியில், கற்பகம் பல்கலை அணி, பி.எஸ்.ஜி. கல்லுாரி அணியுடன் மோதியது. 36-27 என்ற புள்ளிக்கணக்கில், கற்பகம் பல்கலை அணி முதலிடத்தை தட்டியது. வெற்றி பெற்ற வீரர்களை, பல்கலை நிர்வாகத்தினர் பாராட்டினர்.