/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; இதுவரை 32 ஆயிரம் பேர் பதிவு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; இதுவரை 32 ஆயிரம் பேர் பதிவு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; இதுவரை 32 ஆயிரம் பேர் பதிவு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; இதுவரை 32 ஆயிரம் பேர் பதிவு
ADDED : ஆக 15, 2025 08:52 PM
பொள்ளாச்சி; முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க, கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை வரை, 32,199 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில், இரு பாலரும் பங்கேற்கும் வகையிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும்.
மாவட்ட அளவில், 25 விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில், 7 வகை விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில், 37 வகை விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
அவ்வகையில், நடப்பாண்டு விளையாட்டு போட்டிக்கான ஆன்லைன் முன்பதிவு, கடந்த மாதம் 14ம் தேதி துவங்கியது. முன்பதிவுக்கு இன்று 16ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் 20ம் தேதி வரை, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், சுயமாகவோ, தங்கள் பள்ளி, கல்லுாரி வாயிலாகவோ முன்பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக, 'ஆடுகளம்' தகவல் தொடர்பு மையத்தை அனைத்து வேலை நாட்களிலும் காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, 95140 00777 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நேற்று முன்தினம் மாலை வரை, கோவை மாவட்டத்தில், 32,199 பேர் விண்ணப்பத்திருந்தனர். கோவை நேரு விளையாட்டரங்கில் போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

