/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை சேலத்திலுள்ள காப்பகத்தில் ஒப்படைப்பு
/
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை சேலத்திலுள்ள காப்பகத்தில் ஒப்படைப்பு
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை சேலத்திலுள்ள காப்பகத்தில் ஒப்படைப்பு
பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை சேலத்திலுள்ள காப்பகத்தில் ஒப்படைப்பு
ADDED : செப் 19, 2024 07:33 AM

பொள்ளாச்சி: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரசவ சிகிச்சைக்காக கர்ப்பிணி ஒருவர் வந்தார். அந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த பச்சிளம் குழந்தையை வேண்டாம் என தெரிவித்து, அதற்கான கடிதத்தை டாக்டர்களிடம் அந்த பெண் கொடுத்தார்.
அதிர்ச்சியடைந்த டாக்டர்கள், முறைப்படி போலீசார் முன்னிலையில் அந்த பெண்ணிடம் உறுதிபடுத்திக் கொண்டு கடிதத்தையும், குழந்தையும் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து, கோவை மாவட்ட குழந்தைகள் அலகுக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா மற்றும் நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர். அவர்கள், குழந்தையை, 20 நாட்களாவது மருத்துவமனையில் பாரமரிப்பில் வைக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.
கடந்த, 21 நாட்களாக குழந்தைகள் நலப்பிரிவு முதன்மை டாக்டர் செல்வராஜ், டாக்டர் அமுதா, செவிலியர்கள் மஞ்சுளா, மைதிலி ஆகியோர் குழந்தையை பாராமரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று பெற்றோரால் கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் வாயிலாக, சேலம் லைப் லைன் டிரஸ்ட் காப்பகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்தாண்டு, பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில் விடப்பட்ட குழந்தை முதல், தற்போது பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தை என, மொத்தம், ஆறு குழந்தைகள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வாயிலாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வாயிலாக டிரஸ்ட் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.