நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிபாளையம் என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டம் செயல்பட்டு வருகிறது.நேற்று மாலை வழக்கமான ஆய்வில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள், கதவணையில் குழந்தையின் சடலம் ஒன்று சிக்கிக் கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
பின் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்