ADDED : பிப் 27, 2026 06:26 AM

கோவில்பாளையம்: கோவில்பாளையம் ராகவேந்திரா மண்டபத்தில், சர்க்கார் சாமக்குளம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
விழாவில், 100 கர்ப்பிணிகளுக்கு, சில்வர் தட்டு, புடவை, பழங்கள், வளையல், நெல்லிக்காய் மற்றும் ஐந்து வகையான உணவு, வடை, பாயாசத்துடன் வழங்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் கோமளவல்லி கந்தசாமி தலைமை வகித்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சம்ருதா பேசுகையில், ''கர்ப்பம் உறுதியானவுடன் அருகில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய வேண்டும். மாதந்தோறும் எடை எடுத்து, எடை அதிகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். பால், பழங்கள், கீரை, காய்கறி மற்றும் அயோடின் கலந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வேண்டும்.
பிரசவத்தை மருத்துவமனையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும். இதற்கு பின், தாய்ப்பாலுடன் இணை உணவு தர வேண்டும்,'' என்றார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், முன்னாள் எம்.பி., நாகராஜன், மாவட்ட பிரதிநிதி கந்தசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் விஜயகுமார், நகரச் செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
