/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை மரணம் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
/
பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை மரணம் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை மரணம் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை மரணம் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : மே 15, 2025 12:23 AM
கோவை,; ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ்சில் இருந்து, தவறி விழுந்து ஒன்பது மாத ஆண் குழந்தை பலியான விவகாரத்தில், டிரைவர் மற்றும் கண்டக்டர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் கருங்கலுாரை சேர்ந்தவர் ராஜதுரை, 31; மனைவி முத்துலட்சுமி. தம்பதிக்கு ஏழு வயதில் மகள், ஒன்பது மாத ஆண் குழந்தை இருந்தனர்.
ராஜதுரை குடும்பத்துடன் கோவை ராமநாதபுரத்தில் தங்கி, கட்டட வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த வாரம் சொந்த ஊர் சென்ற ராஜதுரை கடந்த, 12ம் தேதி இரவு சேலத்தில் இருந்து கோவை வந்த அரசு பஸ்சில் பயணித்தார்.
ஒன்பது மாத குழந்தை நவனீஷ், தோளில் துாங்கிக்கொண்டிருந்தான். பஸ்சின் பின்பகுதி தானியங்கி கதவு மட்டும் மூடப்பட்டிருந்தது. முன்பக்க கதவு மூடப்படாமல் இருந்தது.
இரவு, 10:15 மணிக்கு சங்ககிரி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வளையக்காரனுார் மேம்பாலத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.
அப்போது ராஜதுரையின் தோளில் துாங்கிக் கொண்டிருந்த குழந்தை நவனீஷ், தவறி கீழே விழுந்தான்.
கதவு திறந்திருந்ததால், கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பஸ்சில் இருந்து ரோட்டில் விழுந்தான். படுகாயத்துடன் மீட்கப்பட்டு, குமாரபாளையம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், பணியின் போது அஜாக்கிரதையாக செயல்பட்ட பஸ் டிரைவர் சிவன்மணி மற்றும் கண்டக்டர் பழனிசாமி ஆகிய இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து கோவை மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் துரைசாமி உத்தரவிட்டார்.