/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 16, 2025 10:44 PM
கோவை; குழந்தைகளுக்கான உரிமைகளை பாதுகாப்பதும் வலுப்படுத்துவதும் அவசியம் என்று, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் விஜயா தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள், அதை களைவதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பள்ளி இடைநிற்றல், குழந்தை திருமண தடுப்பு, குழந்தைகளுக்கான சட்டங்கள், திட்டங்கள் மற்றும் கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உறுப்பினர்கள் கசிமிர்ராஜ், ஸ்ரீ காவ்யா நாகராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹம்சா, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, குழந்தை நலக்குழு உறுப்பினர், இளைஞர் நீதிக்குழும உறுப்பினர், நன்னடத்தை அலுவலர் மற்றும் போலீஸ் துறை, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.