/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு மழலைகள் 'விசிட்'
/
போலீஸ் ஸ்டேஷனுக்கு மழலைகள் 'விசிட்'
ADDED : ஜூலை 20, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; சிறுமுகை போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ் ஸ்டேஷனின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்ள தனியார் பள்ளியை சேர்ந்த எல்.கே.ஜி., யூ.கே.ஜி., குழந்தைகள் வருகை புரிந்தனர்.
குழந்தைகளை வரவேற்ற போலீசார், போலீசாரின் வேலை என்ன, எவ்வாறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்தனர். மேலும், சாலை விதிகளை பின்பற்ற வேண்டும், பெற்றோர் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால், ஹெல்மெட் போட வலியுறுத்த வேண்டும், எதாவது குற்ற சம்பவம் நடந்தால் பெற்றோரிடம் முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும், அவர்கள் வாயிலாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.