/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை விழாவின் ஒரு பகுதியாக குழந்தைகள் சைக்கிள் பேரணி
/
கோவை விழாவின் ஒரு பகுதியாக குழந்தைகள் சைக்கிள் பேரணி
கோவை விழாவின் ஒரு பகுதியாக குழந்தைகள் சைக்கிள் பேரணி
கோவை விழாவின் ஒரு பகுதியாக குழந்தைகள் சைக்கிள் பேரணி
ADDED : டிச 01, 2024 11:36 PM

கோவை; குழந்தைகளிடையே சாலை போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த, கோவை யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 சார்பில், 'குட்டி ரோடீஸ்' என்ற பெயரில், குழந்தைகளுக்கான சைக்கிளிங் நிகழ்ச்சி, கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஆறு முதல், 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்றனர். இதில் 500 மீட்டர், 1 கிலோ மீட்டர், 2 மற்றும் 5 கிலோ மீட்டர் துாரத்துக்கு சைக்கிள் ஓட்டினர்.
கோவை விழாவின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடந்தது. 1200 குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் தலைக்கவசம், டி சர்ட், சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
அறிமுக நிகழ்ச்சியில், யுனைடெட் ரவுண்ட் டேபிள் 186 உறுப்பினர்கள் நவீன், கரண், அஷ்வின்குமார், பாலாஜி, கவுதம், நிஹால், விக்னேஷ், பிரவீன் எட்வர்ட் மற்றும் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.