/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்: கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
/
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்: கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்: கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்: கலைநிகழ்ச்சி, போட்டிகளில் வென்றோருக்கு பரிசு
ADDED : நவ 14, 2025 09:23 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் சித்ரா தலைமை வகித்தார். மாணவர்களின் பேச்சு, நடனம், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் ரோஸ்லின் கலைச்செல்வி வரவேற்றார். மண்ணுார் ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ் ஆசிரியர் சிவகுமார், குழந்தைகள் தின விழாவின் முக்கியத்துவத்தையும், ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்தும் பேசினார்.
தொடர்ந்து மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், தமிழ் முக்கூடல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்லமுத்து, நிர்வாகிகள் சான்றிதழ், பரிசு வழங்கினர். முதுகலை ஆசிரியர் சிவகுமார் நன்றி கூறினார்.
* சூலக்கல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பெடரல் வங்கி சார்பில், குழந்தைகள் தின விழா நடந்தது. மாணவர்களிடையே நினைவு திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
* கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் தினகரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சத்தியா முன்னிலை வகித்தார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தனி பாடல், குழு பாடல், நடனம், மாறுவேடம், பேச்சு, ஆசிரியர்களின் பாடல் ஆகியவை இடம் பெற்றன. மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாபிரியா, மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ், பரிசு வழங்கி பேசினார். எஸ்.ஐ. உஸ்மான், தலைமை காவலர் பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கிணத்துக்கடவு * கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு நல் விருந்து வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் கண்ணம்மாள், ஆசிரியர்கள், பி.டி.ஏ., தலைவர் கிருஷ்ணன் பங்கேற்றனர். இதை தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகர்வோர் அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் மோகன் பள்ளி மாணவர்களுக்கு, பென்சில், பேனா, ஸ்கேல் உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.
* வடசித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகள் தின விழா விழா நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களுக்கு நல்விருந்து அளிக்கப்பட்டது. மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அரசம்பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜன், பள்ளி தூதர் கண்ணன் ஆகியோர்கள் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தலைமை ஆசிரியர் பழனிச்சாமி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் மயிலாத்தாள் தலைமை வகித்தார். குழந்தைகள் தின விழா குறித்து மாணவர்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
வால்பாறை * வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவுக்கு, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர்கள் ரெஜினா, ராகவன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கணேஷ் தலைமையில் நடந்த விழாவில், மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எஸ்டேட் பொதுமேலாளர் திம்மையா, பள்ளிக்குழு செயலாளர் ஜான்சன் ஆகியோர் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.
* உருளிக்கல் கீழ் பிரிவு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு, தலைமை ஆசிரியர் சந்திரா தலைமை வகித்தார். மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி கவுஸ்ரீநிலாவை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.
* நல்லகாத்து ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் ரஞ்சித் தலைமை வகித்தார். கேக் வெட்டி குழந்தைகள் தின விழாவை கொண்டாடினர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகராட்சி கவுன்சிலர் ரவிசந்திரன் பரிசு வழங்கினார்.
உடுமலை * உடுமலை, கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா கல்வி நிறுவனத்தில், கே.ஜி., வகுப்பு மழலையர் நேரு போல் வேடமணிந்து வந்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சர்வதேச பள்ளி மாணவர்கள் குறுநாடகம் நடத்தினர். பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சயந்தி வரவேற்றார். தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
* ஆர்.கே.ஆர்., குருவித்யா மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். பள்ளிச்செயலர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் செல்வக்குமார் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினர்.
ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் பேச்சு, கவிதை, ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆர்.கே.ஆர்., கல்வி குழும தலைவர், செயலர், முதல்வர் மாலா பங்கேற்றனர்.
* ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் செண்பகவல்லி தலைமை வகித்தார். தமிழாசிரியர் நர்மதா, மாணவியர் சனாபாத்திமா, சுபஸ்ரீ முன்னாள் பிரதமர் நேரு குறித்து பேசினர். கலைநிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர்கள் சுதமதி, சுதா, ராஜாத்தி, ராஜேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
* பூலாங்கிணறு அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். வேதியியல் ஆசிரியர் ஜெகநாதஆழ்வார்சாமி வரவேற்றார். தமிழாசிரியர் கலாவதி, முதுகலை தமிழாசிரியர் சரவணன், நேரு குறித்து பேசினர். கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சாதனாவுக்கு கோப்பை வழங்கப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜான்பாட்ஷா நன்றி தெரிவித்தார்.
* எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், கல்வி கழகத்தின் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கணித ஆசிரியர் பர்குணன் வரவேற்றார். தலைமையாசிரியர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பேசினர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. பட்டதாரி ஆங்கில ஆசிரியர் மீனாட்சி நன்றி கூறினார்.

