/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறார் வாசிப்பு மையம் கிராமத்தில் துவக்கம்
/
சிறார் வாசிப்பு மையம் கிராமத்தில் துவக்கம்
ADDED : ஜன 31, 2025 11:48 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அறிவுச்சோலை விழிப்புணர்வு மையத்தின் சிறார் வாசிப்பு மையம் துவங்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே, பில்சின்னாம்பாளையத்தில், சிறார்களின் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையில், அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையத்தின் சார்பில், சிறார் வாசிப்பு மையம் துவங்கப்பட்டது.
கவிஞர் செந்திரு தலைமை வகித்து பேசுகையில், நுால்களை வாசித்ததால், வாழ்வில் உயர்ந்தவர்களை பற்றி விளக்கினார். அமைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். வாசிப்பு மையத்தை எழுத்தாளர் பாலமுருகன் துவக்கி வைத்தார்.
அமைப்பின் நிறுவனர் அம்சபிரியா பேசுகையில், ''அறிவுச்சோலை கல்வி விழிப்புணர்வு மையம், கல்வி மேம்பாட்டு செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருகிறது. தனித்திறன்களை ஊக்குவிப்பதற்கான பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது.
குடியரசு தின விழாவையொட்டி சிறார்களின் மத்தியில் புத்தக வாசிப்பை மேம்படுத்தும் வகையில், சிறார் வாசிப்பு மையம் துவங்கப்பட்டது. இல்லம் தோறும் நுாலகமே எங்கள் கனவாகும்,'' என்றார்.
அமைப்பாளர் ஜோதி பேசுகையில், ''வாசிப்பு மையம் மிகவும் பயன் உள்ள செயலாக இருக்கிறது. பள்ளி இடைநிற்றலை தவிர்த்து, சிறு நுால்களை வாசிக்க துாண்டுதல்களாக உள்ளது,'' என்றார்.
பேச்சாளர் கனகராஜன், நுாலக புத்தகங்களை வாசிப்பதன் அவசியம் குறித்து பேசினார். கவிஞர் காளிமுத்து நன்றி கூறினார்.