/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாயமாகிறது சித்திரைச்சாவடி தடுப்பணை ; ஆக்கிரமிப்பு அகற்றவில்லை; துார் வாரும் பணி நடக்கவில்லை
/
மாயமாகிறது சித்திரைச்சாவடி தடுப்பணை ; ஆக்கிரமிப்பு அகற்றவில்லை; துார் வாரும் பணி நடக்கவில்லை
மாயமாகிறது சித்திரைச்சாவடி தடுப்பணை ; ஆக்கிரமிப்பு அகற்றவில்லை; துார் வாரும் பணி நடக்கவில்லை
மாயமாகிறது சித்திரைச்சாவடி தடுப்பணை ; ஆக்கிரமிப்பு அகற்றவில்லை; துார் வாரும் பணி நடக்கவில்லை
ADDED : மே 12, 2025 12:26 AM

தொண்டாமுத்தூர்; சித்திரைச்சாவடி தடுப்பணை நொய்யலாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், தடுப்பணையை தூர் வாரும் பணியை, அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளதாக, விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவையின் ஜீவநதியாக, நொய்யல் ஆறு விளங்கி வருகிறது. இந்த நொய்யாலாற்றின் முதல் தடுப்பணையாக, சித்திரைச்சாவடி தடுப்பணை உள்ளது. இங்கிருந்தே, நொய்யல் ஆற்றின், இரு கிளை வாய்க்கால்கள் உருவாகி, கோவையில் உள்ள குளங்களுக்கு நீர் செல்கிறது.
சித்திரைச்சாவடி தடுப்பணையை சுற்றி, 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மழை வெள்ளத்தால், தடுப்பணையில், மண் திட்டுகள் நிறைந்து, தடுப்பணையில் தற்போது, நீர் சேமிக்க முடியாமல் உள்ளது.
இதனால், தடுப்பணையை தூர்வார வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், 230 கோடி ரூபாய் மதிப்பில் நொய்யல் ஆற்றை புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
அதிலும், சித்திரைச்சாவடி தடுப்பணை தூர்வாரப்படவில்லை. அதன்பின், சித்திரைச்சாவடி தடுப்பணையை தூர்வார, நொய்யால் ஆற்றின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியிருந்தது.
ஆனால், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) மற்றும் வருவாய்த்துறையினர், இன்று வரை ஆக்கிரமிப்பை அகற்ற, சர்வே செய்யும் பணியை துவங்காமல் உள்ளனர். ஆக்கிரமிப்பை எடுத்த பின்பே தூர்வார முடியும்.
ஆனால், சர்வே செய்யக்கூட அதிகாரிகள் முன் வரவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர் விவசாயிகள். மழைக்காலம் முடிவதற்குள், சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரினால் மட்டுமே, இந்தாண்டு பெய்யும் தென்மேற்கு பருவமழையில் வரும் நீரை, தடுப்பணியில் முழுமையாக சேமிக்க முடியும்.
அதன் மூலம் சுற்றுப்பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயமும் செழிக்கும்.
இதை உணர்ந்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.