/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
/
மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா
ADDED : ஏப் 25, 2025 11:38 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கோவில்பாளையம் காளியண்ணன்புதுார் மீனாட்சி அம்மன் உடனமர் சுந்தரேஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழா நாளை (27ம் தேதி) மாலை, 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் வாஸ்து சாந்தி, இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தி பூஜையுடன் துவங்குகிறது.
வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு திருஆபரணப்பெட்டி அழைத்து வருதல், இரவு, 8:00 மணிக்கு சக்தி கலசம் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 29ல் காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு அழைத்தல், காலை,8:30 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மதியம், 2:30 மணி முதல் பூவோடு எடுத்தல், இரவு, 7:00 மணிக்கு சக்தி கலசம் கங்கையில் சேர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு மதுரைவீரன் சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, மே 1ம் தேதி மஞ்சள் நீர், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.