அன்னுார்,; அன்னுார், அ.மு. காலனியில், மூன்று நாள் சித்திரை திருவிழா நடந்தது. எய்ம் பவுண்டேஷன் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், மூன்றாவது ஆண்டாக விழா நடந்தது.
இதில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. பெரியவர்களுக்கு லக்கி கார்னர், உறியடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.
மேலூர் சசியின் பல குரல் நிகழ்ச்சியும், சின்னத்திரை நட்சத்திரம் இனியாஸின் வெற்றிசை பாடல், காந்தாரா நடனம், கருப்பசாமி நடனம் ஆகியவை நடைபெற்றன. இதில் சாதனை படைத்தோர் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் ஒருங்கிணைப்பாளர் சந்திரதாஸ் தலைமை வகித்தார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் சுபஸ்ரீ முன்னிலை வகித்தார்.
எய்ம் பவுண்டேஷன் நிர்வாகிகள் கிருஷ்ணதாஸ், அரவிந்த், பிரதீப் உள்பட பலர் பங்கேற்றனர். சிறுவர் முதல் முதியோர் வரை 400 பேருக்கு பல்வேறு போட்டிகளில் பங்கேற்றதற்கு பரிசுகள் வழங்கப்பட்டன.