/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாத விழா
/
மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில் சித்திரை மாத விழா
ADDED : ஏப் 21, 2025 08:56 PM

மேட்டுப்பாளையம், ; மருதூர் ஆஞ்சநேயர் கோவிலில், சித்திரை மாத விழா நடைபெற்றது.
காரமடை அருகே மருதூரில், மிகவும் பழமை வாய்ந்த அனுமந்தராய ஆஞ்சநேயர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் சனிக்கிழமையில் விழா நடைபெறும். சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை விழா, விமரிசையாக நடந்தது.
காலையில் கோவில் நடை திறந்து, மூலவர் ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்பு மா, பலா, வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை உள்பட, 27 வகையான பழங்களால், ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பூஜை செய்து தீபாராதனை முடிந்த பின், பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. காரமடையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பஜனை குழுவினர், பஜனை பாடினர். விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.