''மாநகராட்சியில நகரமைப்பு அதிகாரியை வேற ஊருக்கு துாக்கி அடிச்சிட்டாங்களாமே...''
''மாநகராட்சியில நகரமைப்பு அதிகாரியை வேற ஊருக்கு துாக்கி அடிச்சிட்டாங்களாமே...''
UPDATED : ஜூன் 08, 2026 07:10 PM
ADDED : ஜூன் 08, 2026 06:44 PM
''மாநகராட்சியில நகரமைப்பு அதிகாரியை வேற ஊருக்கு துாக்கி அடிச்சிட்டாங்களாமே...''
''ஆமாப்பா... பில்டிங் அப்ரூவலுக்கு கட்சி நிதி வாங்கக் கூடாதுன்னு மேலிடத்துல இருந்து ஆர்டர் போட்டிருக்காங்க. கட்சி நிதி கிடையாது; ஆபீசர்களுக்கு லஞ்சம்னு சொல்லி, பணம் வாங்கிட்டு இருந்திருக்காரு. விண்ணப்பதாரர்கள் பலருக்கும் போன் போட்டு, பணம் கேட்டு நச்சரிச்சதா கம்ப்ளைன்ட் போயிருக்கு. உளவுத்துறை மூலமா என்கொயரி செஞ்சதுல உண்மைன்னு தெரிஞ்சதும், நெல்லைக்கு துாக்கியடிச்சிட்டாங்க,''
''கவுன்சில் கூட்டத்தை தள்ளி வைச்சிட்டாங்களாமே...''
''பழைய கமிஷனர் இருந்தப்போ, 10ம் தேதி நடத்துறதுக்கு பிளான் வச்சிருந்தாங்க. இப்போ, ஜோனல் மீட்டிங் நடந்துட்டு இருக்கு. கவுன்சிலர்களுக்கு இன்னும் தீர்மானங்கள் அனுப்பலை. மேயரிடம் தேதி கேட்டிருக்காங்க. கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிட்டாங்களாம். கவுன்சில் கூட்டத்துல காங்கிரஸ், கம்யூ., கட்சி கவுன்சிலர்கள் எப்படி நடந்துக்குவாங்களோன்னு தி.மு.க. சைடுல உளவு பார்த்துட்டு இருக்காங்க...''//
