/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
/
காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
ADDED : மே 08, 2025 12:46 AM
நெகமம்; நெகமம், மாளேகவுண்டன்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, வரும், 12ம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
நெகமம், மாளேகவுண்டன்பாளையம் காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா வரும், 11ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை 6:30 மணிக்கு, விநாயகர் வழிபாடு, மஹாசங்கல்பம், காப்பு அணிதல் நடக்கிறது. இரவு 8:15 மணிக்கு, கும்ப அலங்காரம் மற்றும் சக்தி அழைக்கும் நிகழ்வு நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, அலங்கார பூஜை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
வரும், 12ம் தேதி, காலை 7:15 மணிக்கு, பால் பூஜை, 9:15 மணிக்கு, விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு, முளைப்பாரி மற்றும் சீர்களுடன் ஊர்வலம் வரும் நிகழ்வு நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, மஞ்சள் நீர் உற்சவம், மகா அபிஷேகம் நடக்கிறது. மதியம் 1:00 மணிக்கு, சர்வ அலங்கார வழிபாடு மற்றும் அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது.