/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா
/
சவுடேஸ்வரி அம்மன் கோவில் ஆண்டு விழா
ADDED : ஆக 29, 2025 10:17 PM
சூலுார்; குமாரபாளையம் சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டு விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.
சூலுார் அடுத்த குமாரபாளையத்தில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, 25வது ஆண்டு விழா நேற்று நடந்தது. பூண்டி, மேட்டுப்பாளையம், அவிநாசி, பவானி, கேரன மாநிலம் நெம்மாறை ஆகிய இடங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது.
நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா துவங்கியது. பல்வேறு வகையான மூலிகைகளை கொண்டு ஹோமம் நடந்தது. மதியம், ஸ்ரீ நாகமுனி, ராஜ நாக மகா முனிக்கு, தீர்த்தாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, சவுடேஸ்வரி அம்மனுக்கு, அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவை, மேட்டுப்பாளையம், சோமனூர், பொள்ளாச்சி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.