/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்னுார், மேட்டுப்பாளையத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
/
அன்னுார், மேட்டுப்பாளையத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
அன்னுார், மேட்டுப்பாளையத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
அன்னுார், மேட்டுப்பாளையத்தில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி
ADDED : ஏப் 14, 2025 04:34 AM

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான, ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது.
அன்னூர், சத்தி ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ., கிறிஸ்துநாதர் ஆலயத்தில் இருந்து, ஆயர் சாந்தகுமார் தலைமையில், கிறிஸ்தவர்கள் கைகளில் குருத்தோலை ஏந்தியபடி, சத்தி சாலை, சர்ச் வீதி, அவிநாசி சாலை வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தனர்.
அங்கு சென்னை ரீசர் பால் சிறப்பு செய்தி அளித்தார். சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில் குருத்தோலை பவனி நிகழ்வு நடந்தது. காரமடை சாலையில் உள்ள ஜி.எம்.ஆர்.சி, பள்ளி வளாகத்தில் இருந்து, குருத்தோலை பவனி துவங்கியது. பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் குருத்தோலைகளை தீர்த்தம் தெளித்து மந்திரித்து, பவனியை துவக்கி வைத்தார்.
கிறிஸ்துவ மக்கள்கள் கையில் குருத்தோலையை ஏந்திய படி, காரமடை, ஊட்டி சாலை வழியாக அந்தோணியார் ஆலயத்தை அடைந்தனர்.
அங்கு நடந்த திருப்பலிக்கு பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமை வகித்தார். கோத்தகிரி ரட்சகர் சபை பாதிரியார் லூயிஸ் ராஜ் மறையுரை ஆற்றி, நற்கருணை ஆசீர் வழங்கினார்.
வரும் 17ம் தேதி புனித வியாழன் வழிபாடும், 18ம் தேதி புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாடும், 19ம் தேதி பாஸ்கா திருவிழிப்பும், 20ம் தேதி உயிர்ப்பு ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளன.
மேட்டுப்பாளையம் காட்டூர் புனித ஜோசப் தேவாலயத்தில், குருத்து ஞாயிறு திருப்பலி வெகு விமரிசையாக நடந்தது. சிரோ மலபார் கிறிஸ்தவ சமூகத்தினர், குருத்து ஞாயிறு விழாவை கொண்டாடினர். கீதங்கள் பாரம்பரிய மரபுகளுடன், பிரார்த்தனை நடைபெற்றது.
பங்கு பாதிரியார் ஆண்டோ ராயப்பன், பிரார்த்தனையை நிறைவேற்றினார்.
துடியலூர், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில், 100க்கும் அதிகமான கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளன. சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி., அகில இந்திய குடும்ப ஜெப ஐக்கிய ஆலயம், பெத்ராப்பா சபை உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களை சேர்ந்த மக்கள் குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்து கொண்டனர்.
-நமது நிருபர் குழு--