/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
/
வால்பாறையில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
வால்பாறையில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
வால்பாறையில் கல்லறை திருநாள்; கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்பு
ADDED : நவ 03, 2025 01:50 AM

வால்பாறை: வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் கல்லறை திருநாளையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
கிறிஸ்தவர்கள், இறந்தவர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் நவ., 2ம் தேதி கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசப்படுகிறது. கல்லறை திருநாளில் அவர்களது நினைவிடங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி, கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
வால்பாறை துாய இருதய ஆலய கல்லறை தோட்டத்தில், ஆலயபங்கு தந்தை ஜெகன்ஆண்டனி தலைமையில் திருப்பலி பூஜைகள் நடந்தன.
ரொட்டிக்கடையில் புனிதவனத்துசின்னப்பர் ஆலயம், புனித அந்தோணியார் ஆலய பங்கு கல்லறை தோட்டத்தில் பங்குதந்தையர் தலைமையில் சிறப்பு ஜெபவழிபாடு நடந்தது. இதில் நுாற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.